ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசையில் 40 இடங்கள் முன்னேறிய கேமரூன் 78வது இடத்தில் உள்ளார்.
ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதல் இடத்தைத் தக்கவைத்துள்ளார். ரோகித் சர்மா, விராட் கோலி 2 மற்றும் 4-வது இடத்தில் நீடிக்கின்றனர்.
அண்மையில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 11வது இடத்திலும், மிட்சல் மார்ஷ் 44வது இடத்திலும் உள்ளார்.
அதிரடியாகச் சதமடித்த கேமரூன் கிரீன் கிடுகிடுவென 40 இடங்கள் முன்னேறி 78வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.