உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கழிவு நீர் கால்வாய்க்குள் இருசக்கர வாகனத்துடன் இளைஞர்த் தவறி விழுந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திராபுரத்தில் கவுர் கிரீன் சிட்டி மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு பொருட்கள் வாங்குவதற்காக இளைஞர் ஒருவர் வந்தார். தொடர்ந்து அவர் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி பின்னோக்கி நகர்த்தினார்.
அப்போது திறந்த நிலையில் இருந்த கால்வாய்க்குள் இருசக்கர வாகனத்துடன் இளைஞர் தவறி விழுந்தார். தொடர்ந்து கழிவு நீரில் தத்தளித்த இளைஞரை அருகில் இருந்தவர்கள் ஏணியைப் பயன்படுத்தி பத்திரமாக மீட்டனர்.