அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட டேனில் மெட்வெதேவுக்கு 37 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் 13ம் நிலை வீரரான டேனில் மெட்வெதேவ், தரநிலைப் பெறாத பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெஞ்சமின் போன்சியிடம் தோல்வியடைந்தார்.
இதனால் கடும் கோபமடைந்த அவர், ராக்கெட்டைச் சேரில் அடித்து உடைத்தார். இதனைக் கண்ட பார்வையாளர் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் அமெரிக்க டென்னிஸ் சங்கம் மெட்வெதேவுக்கு 42 ஆயிரத்து 500 டாலர் அபராதமாக விதித்துள்ளது. இது இந்திய மதிப்பில் 37 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் ஆகும்.