திட்டங்களுக்கு ஆடம்பரமான பெயர்களை வைத்திருப்பதும், வரி செலுத்துவோரின் பணத்தை விளம்பரத்திற்காக வீணாக்குவதும் திமுக அரசாங்கத்தின் அடையாளமாக மாறியுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சிவகங்கை மாவட்ட வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மிதந்தது மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளில், திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் கூட சாக்கடையில் போய்விட்டன என்றும், மக்களின் குறைகள் கூட குப்பைகளைப் போல வீசப்படுவதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.