ஐபிஎல் தொடரின் போது கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்த வீடியோவை ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி வெளியிட்டுள்ளார்.
கடந்த 18 வருடங்களாக ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் ஐபிஎல் தொடரில் பல சர்ச்சையான நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன.
குறிப்பாக 2008 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்தை, மும்பை அணியின் ஹர்பஜன் சிங் கன்னத்தில் அறைந்தது மிகப்பெரிய சர்ச்சையாகப் பார்க்கப்படுகிறது.
இதற்காக அப்போது ஹர்பஜன் சிங் தொடரிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பின் ஸ்ரீசாந்தின், கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்த வீடியோவை ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி வெளியிட்டுள்ளார்.