இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை எலி, யானையை அடிப்பதைப் போன்றது என அமெரிக்கப் பொருளாதார நிபுணர் வோல்ஃப் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய இறக்குமதி பொருட்களின் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தார். இதற்கு அமெரிக்கப் பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வோல்ஃப் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், அமெரிக்கா இந்தியாவுடனான தொடர்புகளை நிறுத்தினால், இந்தியா தனது ஏற்றுமதிகளை விற்க வேறு இடங்களைக் கண்டுபிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்காவின் நடவடிக்கைப் பிரிக்ஸ் நாடுகளை வலுப்படுத்தும் என்றும் ரிச்சர்ட் வோல்ஃப் கூறியுள்ளார்.