ஷாருக்கானின் சாலிமா பாடலைத் தென்கொரிய இளைஞர் ஒருவர் பாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
இந்திய- கொரிய தம்பதியரான நேஹா மற்றும் ஜோங்சூ, இணையத்தில் ஏற்கனவே பிரபலம். ஜோங்சூ தனது இந்தி திறமையால் குழந்தைக்கு பாடிய தாலாட்டு பாடல் படு வைரலானது.
தற்போது தனது உறவினரின் திருமண விழாவில் ஷாருக்கானின் சாலிமா பாடலைப் பாடி மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தன் குரலால் ஜோங்சு பாடிய அந்தப் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.