ஒருவர் நல்ல மனிதராக இருந்து தமது குடும்பத்தையும் சமூகத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மீது சமூகம் நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்தார். ‘
அனைத்து தடைகள், துன்பங்களை தகர்த்து தன்னார்வலர்கள் ஆர் எஸ் எஸ் அமைப்பை விரிவுபடுத்தியதாகக் கூறினார்.
ஒருவர் நல்ல மனிதராக இருப்பதோடு தமது குடும்பத்தையும் சமூகத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் எனவும் சமூகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல பாடுபட வேண்டும் எனவும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.