இந்தியாவில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் வான்வெளியில் பறக்கும்போது அமெரிக்கா, சீனாவால் கூட கண்காணிக்க முடியாதென அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கௌதம் புத்தா நகரில் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் ஆலையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது பேசிய அவர், நமது இளைஞர்கள் பாதுகாப்புத் துறைக்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் செயல்படுவதாக புகழாரம் தெரிவித்தார்.
தற்போதைய காலக்கட்டத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு ட்ரோன்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் அவற்றை அதிகளவில் உள்நாட்டிலேயே தயாரிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.
மேலும் நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் வான்வெளியில் பறக்கும்போது, அமெரிக்கா, சீனாவால் கூட கண்றியாத முடியாது என ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார்.