4 ஆண்டு கால ஆட்சியில் சிறு துரும்பை கூட கிள்ளாததே திமுக அரசின் சாதனை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வல பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் 2026-ல் ஓய்வு பெறவுள்ளதாலேயே ஜெர்மனிக்கு சென்றுள்ளதாக தெரிவித்தார்.
சனாதனத்தை பற்றி துணை முதலமைச்சர் உதயநிதி மோசமாக விமர்சித்ததை நினைவில் கொள்ள வேண்டும் என்றும், தமிழகத்தில் அரசியல் மாற்றம் வந்தால் மட்டுமே இந்து மதத்தை பின்பற்றுபவர்களுக்கு பாதுகாப்பு என்றும் அவர் கூறினார்.
திமுகவினர் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு மட்டுமே எதிராக செயல்படுவதாகவும் அவர் குறிப்பிடடார்.
திமுக அரசு முருகன் மாநாடு நடத்தியபோது 21 தீர்மானங்களை நிறைவேற்றியதாகவும், அதில் எட்டாவது தீர்மானத்தில், அறநிலையத்துறை கோயில்கள் இருக்கும் இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்படும் என்று கூறினார்கள்.
தீர்மானம் நிறைவேற்றி ஒரு வருடம் முடிந்துவிட்டதாகவும், இதுவரை, ஒரு குழந்தையை கூட அழைத்து வந்து கந்த சஷ்டி பாராயணம் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்களை ஏமாற்ற இதுபோன்ற பொய்களை சொல்வதே திமுக அரசுக்கு வாடிக்கை. இதற்கெல்லாம் 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள்.