புதுக்கோட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் நாய் குறுக்கே வந்ததால் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் எலெக்ட்ரீசியனாகப் பணிபுரிந்து வந்த பிரசாந்த் என்பவர், பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிகொண்டிருந்தார்.
அப்போது மேட்டுப்பட்டி சாலையில் நாய் ஒன்று திடீரெனக் குறுக்கே வந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து பைக் விபத்துக்குள்ளாகவே, பிரசாந்த் படுகாயமடைந்தார்.
உடனடியாக அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.