ஆப்கானிஸ்தானில் 8 முறை அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எண்ணிக்கை 800-ஐ தாண்டியுள்ளது.
ஜலாலாபாத்தில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில், 6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 20 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் மற்றொரு நில நடுக்கம் ஏற்பட்டது.
இது 10 கிலோமீட்டர் ஆழத்தில் 4 புள்ளி 5 ரிக்டர் அளவில் பதிவானது. இவ்வாறு தொடர்ந்து எட்டு முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நள்ளிரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் திடுக்கிட்டு எழுந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
மேலும், பல கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வரை உணரப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.