நாட்டின் பாதுகாப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு நீர் மூழ்கி கப்பல்களை வாங்கும் ஒப்பந்தங்களை இறுதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பாதுகாப்புத்துறையை மேலும் வலிமைப்படுத்தும் விதமாகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அண்மையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹிமகிரி மற்றும் உதயகிரி கப்பல்கள் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டன.
இந்நிலையில் கடற்படையில் மேலும் வலிமையை அதிகரிக்க ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு நீர் மூழ்கி கப்பல்களை வாங்கும் ஒப்பந்தங்களை இறுதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி பிரான்சின் Naval Group உடன் இணைந்து ஸ்கார்பீன் என்ற நீர்மூழ்கி கப்பலை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் ஜெர்மனியின் ThyssenKrupp நிறுவனத்துடன் இணைந்து Stealth என்ற நீர்மூழ்கி கப்பலையும் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் அரசுக்குச் சொந்தமான மசகான் டாக் லிமிடெட் மற்றும் பிரெஞ்சு பாதுகாப்பு நிறுவனமான கடற்படைக் குழுமத்தால் கூட்டாகக் கட்டப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.