உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நூற்றுக்கணக்கான பசுக்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையால் யமுனை நதியில் அபாய அளவைத் தாண்டி வெள்ளநீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நொய்டாவில் உள்ள கோசாலையிலிருந்து 800க்கும் மேற்பட்ட பசுக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
மீட்கப்பட்டுள்ள பசுக்களுக்குத் தேவையான தீவனம், தண்ணீர் ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.