உக்ரைன் போருக்கு இந்தியாதான் காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகர் நவாரோ மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடி சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், அமெரிக்காவிடம் இருந்து வலுவான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டிரம்பின் ஆலோசகர் நவாரோ, ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக பிரதமர் மோடியை, கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்திய-ரஷ்ய பேச்சுவார்த்தைக்கு முன்பு பிரதமர் மோடியும், புதினும் காரில் அரட்டை அடித்துக் கொண்டு சென்றதாக கூறியுள்ள அவர், உக்ரைனில் நடந்த போருக்கு இந்தியாதான் காரணம் என மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இந்திய மக்களின் செலவில் குறிப்பிட்ட சமூகத்தினர் லாபம் ஈட்டுகின்றனர் எனவும், அதனை நிறுத்த வேண்டும் எனவும் நவாரோ கூறியுள்ளார்.