நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளுடன் மத்திய இணையமைச்சர் ஜிதின்பிரசாதாவை எல்.முருகன் சந்தித்து பேசினார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் சிறு, குறு தேயிலை விவசாயிகள் மற்றும் அப்பகுதி நலச்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து சென்று, வணிகம் மற்றும் தொழிற்சாலை துறை மத்திய இணையமைச்சர் JitinPrasada
அவர்களை நேரில் சந்தித்து, நீலகிரி மாவட்ட விவசாயிகள் சார்பாக சில கோரிக்கைகளை முன்வைத்ததாக தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டப் பகுதிகளில் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வரும், YBA, நெல்லிக்கோலு, நாக்குபெட்டா, தொத்தநாடு, மேக்குநாடு, பொரங்காடு, குத்தச்செமை போன்ற 9 விவசாய சங்க நிர்வாகிகளும், சிறு, குறு விவசாயிகளும் இணைந்து, நீலகிரி மாவட்டப் பகுதிகளில் உற்பத்தியாகும் தேயிலைக்கு அடிப்படை ஆதார விலை கோரியும், விவசாயம் சார்ந்து தங்களிடம் இருக்கக்கூடிய நீண்டகால கோரிக்கைகளையும் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் விரைவில் அதற்கான தீர்வுகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக உறுதியளித்ததாக எல்.முருகன் கூறியுள்ளார்.