ஜம்மு காஷ்மீரின் சலால் அணையின் மதகுகள் திறக்கப்பட்டதால் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது.
வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாகக் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதேபோல் ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழைக் கொட்டித் தீர்த்தது.
இதனால் செனாப் நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி சலால் அணையின் மதகுகள் திறக்கப்பட்டதால் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது.