தெலங்கானா மாநிலத்தில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் இயற்கைப் பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி நாடு முழுவதும் விநாயகர்ச் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.
அந்த வகையில் தெலங்கானா மாநிலம் வாரங்கலில் 45 அடி உயரத்தில் பிரம்மாண்ட விநாயகர் சிலை நிறுவப்பட்டது.
இந்தச் சிலை பழங்கள், கரும்பு போன்ற இயற்கைப் பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.
தொடர்ந்து இங்கு ஏராளமான மக்கள் வருகைத் தந்து வழிபாடு நடத்தினர். சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் நிறுவப்பட்ட இந்த விநாயகர் சிலை பலரையும் வெகுவாகக் கவர்ந்தது.