தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகத் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருப்பத்தூரில் கடந்த 2022-ம் ஆண்டு சுமார் 109 புள்ளி 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டது.
பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததால் கட்டடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல் விழுந்தது. மேலும், கழிவறைகளும் மிக மோசமான நிலையில் சேதமடைந்து காணப்பட்டன.
இதுதொடர்பாகத் தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில், தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.