ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள ரசாயன ஆலைக் கிடங்கில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.
எளிதில் தீ பற்ற கூடிய ரசாயனப் பொருட்களை கிடங்கில் சேமித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரைக் கண்டறியப்படாத நிலையில், கிடங்கானது வெடித்துச் சிதறியதில் புகை விண்ணை முட்டும் அளவுக்கு பரவியது.
இதனால் அருகில் இருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தத் தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.