சென்னை வேப்பேரியில் உள்ள பள்ளிகளில் ரயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
வேப்பேரி ஜெயின் வித்யாலயா, அட்வென்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
அப்போது ரயில்வே போலீசார், ரயில்களின் மீது கற்களை வீசக் கூடாது. குழந்தைகளுக்கான உடனடி உதவிக்கு 1098 எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும், தண்டவாளத்தில் செல்பி எடுக்கக் கூடாது உள்ளிட்டவைற்றை மாணவர்களிடம் எடுத்துரைத்தனர்.