திருச்செந்தூரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
திருச்செந்தூர் கால்நடை மருத்துவமனையில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு கட்டடத்தைத் திறந்து வைத்தார்.
இதையடுத்து மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு இலவசக் கால்நடைத் தீவனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், 300க்கும் மேற்பட்ட பெண்கள் வருகைதந்த நிலையில், 100 பேருக்கு மட்டுமே கால்நடைத் தீவனம் வழங்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த மற்ற பெண்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களைப் பல மணி நேரமாகக் காக்க வைத்து ஏமாற்றியதாகவும் குற்றஞ்சாட்டினர்.