திருவள்ளூர் அருகே மதுபோதையில் தவறி விழுந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில் உரிய இழப்பீடு வழங்க கோரி, சக வடமாநில தொழிலாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.
காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமரேஷ் பிரசாத் மதுபோதையில் குடியிருப்பின் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
தொடர்ந்து உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க கோரியும் வடமாநில தொழிலாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர 300-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
அப்போது வடமாநில தொழிலாளர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் போலீசாரும் கற்களை வீசி பதில் தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றம் நிலவியது.
தொடர்ந்து அங்கு சென்ற ஆவடி கூடுதல் ஆணையர்ப் பவானீஸ்வரி சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.