குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வருகையை முன்னிட்டு திருச்சியில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதன்கிழமையன்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளார். இதனைத் தொடர்ந்து திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் குடியரசுத் தலைவர் சாமி தரிசனம் செய்யவுள்ளார். இதற்காக ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் ஹெலிபேட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹெலிபேட் தளத்தில் இருந்து ஸ்ரீரங்கம் கோயில் வரையிலும் மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
குடியரசுத் தலைவர் வருகையையொட்டி ஸ்ரீரங்கம் முழுவதும் காவல்துறைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு காரணம் கருதி புதன்கிழமை மதியம் ஒரு மணி வரை மட்டுமே ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டிரோன்கள் பறக்கவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.