இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக இருந்து வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவுடன் அமெரிக்கா வியாபாரம் செய்யவில்லை என்றும், இந்தியாத்தான் தங்களுடன் வியாபாரம் செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்துப் பொருட்களையும் அனுப்பிவைத்து அமெரிக்க மக்களிடம் 100 சதவீத வரிகளை வசூலித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்க வணிக நிறுவனங்களிடம் இருந்து இந்தியா அதிக அளவு வரிகளை வசூலித்து வருவதாகக் கூறிய அவர், அமெரிக்கா இந்தியாவுடன் மிகக்குறைந்த அளவிலேயே வணிகம் செய்து வருகிறது எனத் தெரிவித்தார்.
வர்த்தகம் மற்றும் வரி விவகாரத்தில் இருநாடுகள் இடையே பல ஆண்டுகளாக நிலவும் ஒருதலைபட்சமான உறவு பேரழிவு போன்றது எனவும் குறிப்பிட்டார்.
மேலும், ரஷ்யாவிடம் இருந்துதான் இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் மற்றும் ராணுவப் பொருட்களை வாங்குகிறது என டிரம்ப் தெரிவித்தார்.