ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் கஜகஸ்தானை வீழ்த்தி இந்தியா ஹாட்ரிக் வெற்றிப் பெற்றது.
முதலிரு ஆட்டங்களில் சீனா, ஜப்பானை வீழ்த்திய இந்தியா 3வது ஆட்டத்தில் கஜகஸ்தானை எதிர்கொண்டது.
இதில் இந்திய வீரர்கள் அபிஷேக் 4 கோல்களும், சுக்ஜீத் சிங், ஜக்ராஜ் சிங் தலா 3 கோல்களும் அடித்து அசத்தினர்.
இறுதியில் 15-0 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிப் பெற்றது.
ஏற்கெனவே சூப்பா் 4 சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்ட இந்தியா, தற்போது தோல்வியே காணாமல் குரூப் சுற்றை நிறைவு செய்திருக்கிறது.
குரூப் ஏ பிரிவில் இந்தியா 9 புள்ளிகளுடன் முதலிடமும், சீனா 4 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும் பிடித்துள்ளன.