அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக், நவோமி ஒசாகா ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
நியூயார்க்கில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷ்யாவைச் சேர்ந்த எகடெரினா அலெக்சாண்ட்ரோவாவை எதிர்கொண்டார்.
இறுதியில் 6-3, 6-1 என்ற நேர்ச் செட் கணக்கில் ஸ்வியாடெக் வெற்றிப் பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காஃபை 6-3, 6-2 என்ற நேர்ச் செட் கணக்கில் வீழ்த்தி ஜப்பானின் நவோமி ஒசாகா காலிறுதிக்குத் தகுதி பெற்றார்.