தீர்வுகளை ஏற்படுத்துவதில் அக்கறை இல்லாமல் இருக்கிறது திமுக அரசு : அண்ணாமலை
Mar 15, 2026, 09:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தீர்வுகளை ஏற்படுத்துவதில் அக்கறை இல்லாமல் இருக்கிறது திமுக அரசு : அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 01:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்டிக்கர் ஒட்ட ஓடிவரும் திமுக அரசு, உங்கள் அரைகுறை பணிகளால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு ஏன் பொறுப்பேற்பதில்லை?  பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

சென்னை சூளைமேடு வீரபாண்டி நகரில், மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் தொட்டியில் தவறி விழுந்து, பெண் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

இந்தத் தொட்டியை, சரியாக மூடாமல் மட்டப்பலகையை வைத்து மூடியிருந்ததாகவும், தெரியாமல் அதில் கால் வைத்த பெண், மட்டப்பலகை உடைந்து தவறி விழுந்து இறந்து விட்டதாகவும், செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால், அது மழை நீர் வடிகால் தொட்டி அல்ல, வண்டல் தொட்டி என்று புதுவிதமான விளக்கத்தை அளித்திருக்கிறது சென்னை மாநகராட்சி. மேலும், இறந்த பெண்ணின் வாய் மற்றும் கைகள் கட்டப்பட்டிருந்ததாகவும் கூறுகிறார்கள்.

அந்தப் புகைப்படங்களைப் பார்த்தால், அவரது துப்பட்டா, கையில் சிக்கியிருப்பது போலத் தான் தெரிகிறதே தவிர, கட்டப்பட்டது போலத் தெரியவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக, பணிக்குச் சென்ற தூய்மைப் பணியாளர் சகோதரி ஒருவர், தேங்கியிருந்த தண்ணீரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருந்தார். இப்போது மற்றுமொரு பெண் உயிரிழந்திருக்கிறார்.

சென்னையில், கடந்த நான்கு ஆண்டுகளாக மழைநீர் வடிகால் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அமைச்சர்களும், சென்னை மேயரும், ஆளுக்கொரு சதவீதம் பணிகள் நிறைவு பெற்று விட்டது என்று நான்கு ஆண்டுகளாகக் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

எப்போது பணிகள் நிறைவுபெறும் என்பது யாருக்குமே தெரியாது. ஒவ்வொரு உயிர்ப்பலி ஏற்படும்போதும், ஏதேதோ கதைகள் சொல்லி மடைமாற்றுவதில்தான் குறியாக இருக்கிறதே தவிர, தவற்றை ஒப்புக்கொண்டு, தீர்வுகளை ஏற்படுத்துவதில் அக்கறை இல்லாமல் இருக்கிறது திமுக அரசு.

கடும் கோடைக் காலத்துக்குப் பின்னர், பெய்யும் மழைநீரை, பூமி உறிஞ்சிவிடும். ஆனால், நாங்கள் செய்த மழை நீர் வடிகால் பணிகளால்தான் தண்ணீர் தேங்கவில்லை என்று ஸ்டிக்கர் ஒட்ட ஓடிவரும் திமுக அரசு, உங்கள் அரைகுறை பணிகளால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு ஏன் பொறுப்பேற்பதில்லை? இந்த அழகில், சென்னை மழை குறித்து, ஜெர்மனியில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் விசாரித்தார் என்று வெற்று விளம்பரம் வேறு.

உடனடியாக, உயிரிழந்த பெண் குறித்த விவரங்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் எல்லாம், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், திமுக அரசை அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Tags: DMKஅண்ணாமலைMK StalinDMK government is not interested in finding solutions: Annamalai
ShareTweetSendShare
Previous Post

தொழில்நுட்ப கோளாறு காரணமாக உடனடியாக நிறுத்தப்பட்ட சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்!

Next Post

செமிகான் சர்வதேச மாநாட்டின் 2வது நாள் நிகழ்வில் பிரதமர் மோடி

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies