தனது தாய் அவமதிக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி கவலைப்பட்டுப் பேசியதை பார்த்துப் பீகார் மாநில பாஜகத் தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் மனமுடைந்து கண்ணீர் விட்டார்.
பீகாரில் நடைபெற்ற பாஜகப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகப் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு எதிரான யாத்திரையின்போது, தனது தாய் அவமதிக்கப்பட்டதாக வேதனைத் தெரிவித்தார்.
தனது தாயை மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களையும் காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சியினர் அவமதித்திருப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, மறைந்த தனது தாயாரை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வதாகக் கவலை தெரிவித்தார்.
பிரதமர் மோடி உணர்ச்சி பொங்க பேசியதைக் கேட்ட பீகார் மாநில பாஜகத் தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் கண் கலங்கினார். அப்போது பின்னால் அமர்ந்திருந்த பெண்கள் சிலரும் கண்ணீர் சிந்தினர்.