சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் வீரர் ரசீத் கான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
ஷார்ஜாவில் நேற்றிரவு நடைபெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிப் பெற்றது.
இப்போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையை ரசீத் கான் படைத்துள்ளார்.
இதற்கு முன்பு நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி 165 விக்கெட்டுகள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது 166 விக்கெட்டுகளை வீழ்த்தி ரசீத் கான் அந்தச் சாதனையை முறியடித்துள்ளார்.