ஜிஎஸ்டி வரி சீர்திருத்ததால் பெண்கள், நடுத்தர மக்கள், சிறு குறு தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரி சீர்த்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தனது சுதந்திர தின உரையின்போது, ஜிஎஸ்டியில் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான நோக்கம் குறித்து தாம் பேசியிருந்தாக கூறிய அவர்,
மத்திய அரசு மற்றும் மாநிலங்களை உள்ளடக்கிய ஜிஎஸ்டி கவுன்சில், மத்திய அரசு சமர்ப்பித்த ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு மற்றும் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை கூட்டாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இது சாமானியர், விவசாயிகள், சிறு குறு தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும், பரந்த அளவிலான சீர்திருத்தங்கள் நாட்டின் குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும், குறிப்பாக சிறு வணிகர்கள் மற்றும் வணிகர்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.