அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகளை விமர்சித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், காலனித்துவ சகாப்தம் முடிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் சீனாவுடன் பேரம் பேசுவதற்கான கருவியாக டிரம்ப் வரிகளைப் பயன்படுத்துவதாகவும், இருநாடுகளும் தனி அரசியல் மற்றும் சட்டங்களைக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்த நாடுகளைத் தண்டிக்க முயலும் தலைவர்கள் கடினமான சூழலுக்குத் தள்ளப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.