வேலூரில் ஆதரவற்ற 9 சடலங்களை சொந்த செலவில் நல்லடக்கம் செய்த இளைஞருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பல மாதங்களாக உரிமைக் கோராமல் 9 சடலங்கள் இருந்து வந்தன.
இது தொடர்பாகக் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் சடலங்களை உரிய அனுமதியோடு பெற்றுக்கொண்டார். பின்னர் தனது சொந்தச் செலவில் சடலங்களுக்கு இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தார்.