இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததை தொடர்ந்து, ரஷ்ய நிறுவனங்கள் இந்தியாவுக்குக் கூடுதல் தள்ளுபடிகளை வழங்க திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிகத் தள்ளுபடிகள் கிடைப்பதால், இந்தியாவும் அதிக ரஷ்ய எண்ணெய்களை வாங்க தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு அனுப்பப்படும் ரஷ்யக் கச்சா எண்ணெயின் விலை, இதுவரைச் சர்வதேச மார்க்கெட்டை விட ஒன்று முதல் இரண்டரை டாலர் மட்டுமே குறைவாக இருந்த நிலையில், செப்டம்பர் மாத இறுதி மற்றும் அக்டோபர் மாதங்களில் பேரலுக்கு மூன்று முதல் நான்கு டாலர்கள் குறைவாக இருக்கும் எனப் ப்ளும்பெர்க் அறிக்கைத் தெரிவித்துள்ளது. இதனால் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கூடுதல் எண்ணெய் வாங்கும் எனக் கூறப்படுகிறது.