கரூர் மாவட்டம், மேலப்பாளையம் அருகே தூர்வாராமல் இருக்கும் வாய்க்காலை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.
அமராவதி ஆற்றில் இருந்து வெளியேறும் தண்ணீரை புலியூர் ராஜவாய்க்கால் மூலம் பெற்று விவசாயிகள் பயன்பெற்று வந்துள்ளனர்.
ராஜவாய்க்காலில் அதிக அளவு தண்ணீர் வருவதால் பயிர்கள் சேதமாவதாகத் தெரிவித்த விவசாயிகள், துணை வாய்க்கால் தூர்வாரப்படாமல் கிடப்பதாகக் குற்றம்சாட்டினர்.
மேலும் துணை வாய்க்காலை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரிவித்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர்.