போலி முகவரி கொடுத்துச் சிம் கார்டு வாங்கிய வழக்கில் கேரள மாவோயிஸ்ட் ரூபேஷ், நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கோவைக் கருத்தம்பட்டியில் சதித்திட்டம் தீட்டியதாக மாவோயிஸ்டுகளான ரூபேஷ், அவரது மனைவி சைனி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் 4 பேரி ஜாமினில் வெளிவந்த நிலையில் போலி முகவரி கொடுத்துச் சிம் கார்டு வாங்கியது தொடர்பாக ரூபேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணைக்காக ரூபேஷ் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா விசாரணையை வரும் 6ம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.