ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தால் கார்களின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. எந்தெந்த கார்கள் எவ்வளவு விலை குறைந்துள்ளன என்பதைப் பார்க்கலாம்.
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், நான்கு அடுக்குகளாக இருந்த வரி விதிப்பு 2 அடுக்குகளாகக் குறைக்கப்பட்டதன் மூலம் ஒட்டுமொத்தமாக 353 பொருட்களின் விலைக் குறைகிறது.
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால், 28 சதவிகிதமாக இருந்த வரி 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளதால், சிறிய ரகக் கார்களின் விலை அதிரடியாகக் குறைய உள்ளது. இது கார்ப் பிரியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்தியர்களால் அதிகம் விரும்பப்படும் கார்கள் எவ்வளவு விலைக் குறைகிறது என்பதைத் தற்போது பார்க்கலாம்.
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான மாருதி சுசுகி நிறுவனத்தின் Alto K10 வகைக் கார் ex-showroom விலை 4 லட்சத்து 23 ஆயிரம் ரூபாயாக உள்ள நிலையில், செப்டம்பர் 22ம் தேதிக்குப் பின்னர் 42 ஆயிரம் குறைந்து 3 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும்.
6 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலான Maruti Suzuki Swift கார் 60 ஆயிரம் ரூபாய் குறைந்து 5 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
Maruti Suzuki Dzire ரகக் கார் விலை 6 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில்,
60 ஆயிரம் ரூபாய் குறைந்து 6 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்படும்.
Maruti Suzuki S-Presso காரின் விலை 4 லட்சத்து 26 ஆயிரம் ரூபாயில் இருந்து 43 ஆயிரம் ரூபாய் குறைந்து, 3 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும்.
Hyundai Grand i10 காரின் ex-showroom விலை 5 லட்சத்து 98 ஆயிரம் ரூபாயாக உள்ள நிலையில், ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் 47 ஆயிரம் ரூபாய் விலைக் குறைந்து 5 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும்.
Tata Tiago காரின் ex-showroom விலை 5 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயாக உள்ள நிலையில், ஜிஎஸ்டி குறைப்பால், 50 ஆயிரம் ரூபாய் குறைந்து, 5 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்படும்.
Tata Nexon கார் விலை 8 லட்சம் ரூபாயாக உள்ள நிலையில், 80 ஆயிரம் ரூபாய் குறைந்து 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும்.
Renault Kwid கார் விலை 5 லட்சத்து 59 ஆயிரம் ரூபாயாக உள்ள நிலையில், 40 ஆயிரம் ரூபாய் குறைந்து 5 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
இதேபோன்று Hyundai Creta கார் விலை 3 சதவிகிதமும், மகிந்திரா தார் காரின் விலை 5 முதல் 10 சதவிகிதமும் குறையும். மகிந்திரா ஸ்கார்பியா, டெயோடா இன்னோவா, பார்ச்சுனர் கார்களுக்கு 50 சதவிகித வரி விதிக்கப்பட்ட நிலையில் தற்போது 40 சதவிகிதமாக விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி 10 சதவிகிதம் குறைவதால் ஸ்கார்பியோ, இன்னோவா, பார்ச்சுனர்க் கார்களின் விலையும் குறையும்.