அதிகார போதையில் பாக்.,ராணுவ தளபதி - பொம்மை பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்!
Sep 12, 2026, 02:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அதிகார போதையில் பாக்.,ராணுவ தளபதி – பொம்மை பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்!

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 04:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் தனது பதவியையும், அதிகாரத்தையும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யும் வகையில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்த செய்தித்தொகுப்பைப் பார்க்கலாம்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, வெளிச்சத்திற்கு வந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், தனது அதிகாரச் செல்வாக்கை படிப்படியாக விரிவுபடுத்தி வருகிறார். ஃபீல்ட் மார்ஷல் பதவிக்கு உயர்த்தப்பட்ட அவர், இரண்டுமுறை அமெரிக்க அதிபர் டிரம்பை  சந்தித்திருந்தார். அதிகாரப் போதையில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், 2030ஆம் ஆண்டுவரைத் தனது அதிகாரத்தை நீட்டிக்க அச்சாரம் போட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நீண்டகால அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையைக் கொண்டுவரும் முயற்சியாக “continuity of the system” என்ற திட்டத்தையும் அவர் முன்னெடுத்திருக்கிறார்.

பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முர்ரியில் தனியார் பண்ணை வீட்டில் இது தொடர்பான சந்திப்பு ரகசியமாக நடைபெற்றுள்ளளது. இதில் பாகிஸ்தானில் மூன்று முறைப் பிரதமராக இருந்தவரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் நிறுவனருமான நவாஸ் ஷெரீப் பங்கேற்றார். அவருடன் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பஞ்சாப் முதலமைச்சர் மரியம் நவாஸ், ராணுவ தளபதி அசிம் முனீர், ஐஎஸ்ஐ இயக்குநர் ஜெனரல் அசிம் மாலிக் உள்ளிட்டோர்  கலந்து கொண்டிருக்கிறார்கள்…

பாகிஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்கள் யாரும், தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்யாத நிலையில், இந்தக் கூட்டத்தில் “continuity of the system” என்ற திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், சிவில் – ராணுவ நிர்வாகக் கட்டமைப்பை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளதாகவும், இதன் மூலம் தேசிய முடிவுகள், மூத்த ராணுவ நியமனங்கள் உள்ளிட்டவற்றில் அரசுக்கும், ராணுவத் தலைமைக்கும் இடையே ஒருமித்த கருத்து உருவாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்தி, அதிகாரத்தை இறுகப் பற்றிக் கொள்ளவும், முன்னாள் பிரதமர் இம்ரான் கானை அரசியலில் இருந்தே ஓரம் கட்டவும் பாகிஸ்தான் ராணுவ தளபதி திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அசிம் முனீரின் பதவிக்காலம் 2025 நவம்பர் 28ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அவரது இந்த நகர்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது. 2022ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட அசிம் முனீர், தனது மூன்றாண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்யும் சூழலில், 1952ம் ஆண்டு ராணுவ சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, தனது பதவியை 5 ஆண்டுகள் நீட்டிக்கவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு முன்னதாக ராணுவ தளபதியாக இருந்த கமர் ஜாவேத் பஜ்வா, மூன்று ஆண்டு பதவிக்காலம் முடிந்த பின்னரும் ஆறு ஆண்டுகள் ராணுவ தளபதியாகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Asim Munirpakistan news todayஷெபாஸ் ஷெரீப்Power-hungry Pakistan Army Chief - Shehbaz Sharif becomes puppet Prime Ministerபாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர்
Share
Tweet
SendShare
Previous Post

களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

Next Post

கார் பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : அதிரடியாக குறையும் கார்கள் விலை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies