களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!
Sep 13, 2026, 04:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 03:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகைக் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாகப் பள்ளி, கல்லூரிகளில், மகாபலி மன்னரை வரவேற்கும் பண்டிகைக் களைகட்டியுள்ளது. வண்ணமயமான ஓணம் விழா கொண்டாட்டம் குறித்து இந்தச் செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம் .

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் மிகப் பெரிய கொண்டாட்டம் நிறைந்த பண்டிகை என்றால் ஓணம் பண்டிகைத் தான். மலையாள நாள்காட்டி படி அத்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோண நட்சித்திரம் வரை ஓணம் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது.

மகாவலி நாட்டின் மன்னனான மகாபலியிடம் மூன்று அடி நிலம் கேட்ட வாமன அவதாரம் எடுத்த மஹா விஷ்ணு முதல் அடியைப் பூமியிலும், அடுத்த அடியை ஆகாயத்திலும் அளந்தார். அடுத்த அடி அளக்க இடம் இல்லாததால் மகாபலி மன்னர்த் தனது தலையைக் காட்டினார்.

வாமன அவதாரம் எடுத்த மஹா விஷ்ணு, மகாபலி மன்னரின் தலையை அளக்கவே இந்த மண்ணை ஆண்ட தனக்கு ஆண்டில் ஒருமுறை மட்டும் மக்களைப் பார்க்க அனுமதி வேண்டும் என்ற வரத்தைப் பெற்றார். அப்படி மகாபலி மன்னன் மக்களைக் காண வரும் நிகழ்வே ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

மலையாள மொழிப் பேசும் மக்கள் இருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் இந்த பண்டிகைக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதே போன்று தமிழகக் கேரளா எல்லைப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளிலும் அத்தம் நட்சத்திரம் முதலே கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. அத்தப்பூ கோலப் போட்டி, ஊஞ்சல் ஆட்டம், உறியடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் உற்சாகமாக நடைபெறுகின்றன.

ஆற்றூர் தனியார் கல்லூரியில் தார் வாகனத்தின் முன் பகுதியில் அமர்ந்து வந்த மகாபலியை மாணவ மாணவிகள் நடனமாடி வரவேற்றனர். பின்னர் அத்தப்பூ கோலப் போட்டி, திருவாதிரை நடனப் போட்டி, உறியடி உட்பட பல போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து அறுசுவை உணவான ஓணம் சத்யா உணவை அனைவரும் ருசித்து உண்டனர் .

இதே போன்று சுங்கான்கடைப் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் கலைக் கல்லூரியிலும் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம் நடைபெற்றது.கேரளப் பாரம்பரிய உடையணிந்து கலக்கிய மாணவிகள், செல்பி எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது போன்று திருவட்டாறு தனியார்  கல்லூரியிலும் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெற்றது.

Tags: கன்னியாகுமரிஓணம் பண்டிகைOnam festival celebration in Weed
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்கு சமூக நீதி இல்லை : தமிழிசை சௌந்தரராஜன்

Next Post

அதிகார போதையில் பாக்.,ராணுவ தளபதி – பொம்மை பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies