கார் பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : அதிரடியாக குறையும் கார்கள் விலை!
Sep 12, 2026, 02:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கார் பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : அதிரடியாக குறையும் கார்கள் விலை!

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 04:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தால் கார்களின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. எந்தெந்த கார்கள் எவ்வளவு விலை குறைந்துள்ளன என்பதைப் பார்க்கலாம்.

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், நான்கு அடுக்குகளாக இருந்த வரி விதிப்பு 2 அடுக்குகளாகக் குறைக்கப்பட்டதன் மூலம் ஒட்டுமொத்தமாக 353 பொருட்களின் விலைக் குறைகிறது.

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால், 28 சதவிகிதமாக இருந்த வரி 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளதால், சிறிய ரகக் கார்களின் விலை அதிரடியாகக் குறைய உள்ளது. இது கார்ப் பிரியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்தியர்களால் அதிகம் விரும்பப்படும் கார்கள் எவ்வளவு விலைக் குறைகிறது என்பதைத் தற்போது பார்க்கலாம்.

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான மாருதி சுசுகி நிறுவனத்தின் Alto K10 வகைக் கார் ex-showroom விலை 4 லட்சத்து 23 ஆயிரம் ரூபாயாக உள்ள நிலையில், செப்டம்பர் 22ம் தேதிக்குப் பின்னர் 42 ஆயிரம் குறைந்து 3 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும்.

6 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலான Maruti Suzuki Swift கார் 60 ஆயிரம் ரூபாய் குறைந்து 5 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

Maruti Suzuki Dzire ரகக் கார் விலை 6 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில்,
60 ஆயிரம் ரூபாய் குறைந்து 6 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்படும்.

Maruti Suzuki S-Presso காரின் விலை 4 லட்சத்து 26 ஆயிரம் ரூபாயில் இருந்து 43 ஆயிரம் ரூபாய் குறைந்து, 3 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும்.

Hyundai Grand i10 காரின் ex-showroom விலை 5 லட்சத்து 98 ஆயிரம் ரூபாயாக உள்ள நிலையில், ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் 47 ஆயிரம் ரூபாய் விலைக் குறைந்து 5 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும்.

Tata Tiago காரின் ex-showroom விலை 5 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயாக உள்ள நிலையில், ஜிஎஸ்டி குறைப்பால், 50 ஆயிரம் ரூபாய் குறைந்து, 5 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்படும்.

Tata Nexon கார் விலை 8 லட்சம் ரூபாயாக உள்ள நிலையில், 80 ஆயிரம் ரூபாய் குறைந்து 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும்.

Renault Kwid கார் விலை 5 லட்சத்து 59 ஆயிரம் ரூபாயாக உள்ள நிலையில், 40 ஆயிரம் ரூபாய் குறைந்து 5 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

இதேபோன்று Hyundai Creta கார் விலை 3 சதவிகிதமும், மகிந்திரா தார்  காரின் விலை 5 முதல் 10 சதவிகிதமும் குறையும். மகிந்திரா ஸ்கார்பியா, டெயோடா இன்னோவா, பார்ச்சுனர்  கார்களுக்கு 50 சதவிகித வரி விதிக்கப்பட்ட நிலையில் தற்போது 40 சதவிகிதமாக விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி 10 சதவிகிதம் குறைவதால் ஸ்கார்பியோ, இன்னோவா, பார்ச்சுனர்க் கார்களின் விலையும் குறையும்.

Tags: gstcar56th GST Council meetingCar enthusiasts hit the jackpot: Car prices drop dramatically
Share
Tweet
SendShare
Previous Post

அதிகார போதையில் பாக்.,ராணுவ தளபதி – பொம்மை பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்!

Next Post

இமாச்சல் : மேகவெடிப்பால் குடியிருப்பு பகுதியில் வெள்ளப்பெருக்கு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies