பிரதமரின் மின்சார பேருந்து திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட 900 பேருந்துகளை ஏற்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மின்சார பேருந்து சேவை திட்டத்தை செயல்படுத்தி வரும் மத்திய அரசு அதற்காக 57 ஆயிரத்து 613 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்தது.
இந்த பேருந்தை மாநிலங்களுக்கு வழங்கும் மத்திய அரசு அதற்கான பராமரிப்பு தொகை, சார்ஜிங் மையங்களையும் அமைத்து தருகிறது. இந்த மின்சார பேருந்து சேவையை தமிழகத்தில் செயல்படுத்த 11 நகரங்களை தேர்வு செய்த மத்திய அரசு முதற்கட்டமாக 900 பேருந்துகளை வழங்க முடிவு செய்தது.
ஆனால், இந்த மின்சார பேருந்துகளை வேண்டாம் எனக்கூறி,
தமிழக அரசு நிராகரித்துவிட்டது. தமிழக அரசின் இந்த முடிவு பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.