சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டி விட்டிருந்த மதராஸி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சிவகார்த்திகேயனின் தோற்றம், நடிப்புடன், ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கமும் படத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்திருக்கிறது. சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்து அசத்திய சிவகார்த்திகேயனின் ஆக்ஷன் காட்சிகள், ரசிகர்களை மேலும் உற்சாகமடையச் செய்திருக்கிறது.
தமிழகத்தில் ஊடுருவும் துப்பாக்கிக் கலாசாரத்தை வேரறுக்கப் போராடுவதாக அமைந்துள்ள கதைக்களமும் படத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது.
சிவகார்த்திகேயன் மட்டுமின்றி வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், விக்ராந்த் எனப் பலரும் அவர்களது திறமைகள் முழுவதையும் வெளிப்படுத்தியிருந்தனர். இதனால், மதராஸி படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறது.