ராஜஸ்தான் மாநிலம், லால்சாகரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலைமையில் தொடங்கிய அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். முக்கிய நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
லால்சாகரில் உள்ள ஆதர்ஷ் வித்யா மந்திரில் ஆர்எஸ்எஸ்ஸின் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம் தொடங்கியது.
இதில் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பாரத மாதாவின் உருவப்படத்துக்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தி கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
மொத்தம் 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் சமூக நல்லிணக்கம், குடும்ப அறிவொளி, சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை, சுயசார்பு உருவாக்கம் மற்றும் குடிமை கடமைகளைக் கடைபிடித்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளன.
இந்தக் கூட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அலோக் குமார், அமைப்பு செயலாளர் மிலிந்த் பரண்டே உள்பட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.