உணவு டெலிவரிக்கான ஜிஎஸ்டி உயர்த்தப்பட்ட நிலையில் வாடிக்கையாளர்கள் மீதே அந்த கட்டணம் திணிக்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தின்படி டெலிவரி கட்டணங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது. இதனால் ஸ்விக்கி, சொமேட்டோ, Blinkit உள்ளிட்ட நிறுவனங்களின் கட்டணம் உயரவுள்ளது.
ஸ்விக்கி, சொமேட்டோ நிறுவனங்கள் ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் வரை ஜிஎஸ்டி வரிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். இருப்பினும் அதனை வாடிக்கையாளர்கள் மீதே சுமத்த அந்நிறுவனங்கள் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
ஜொமாட்டோ நிறுவனம் ஒரு ஆர்டருக்கு 12 ரூபாயும் ஸ்விக்கி 15 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கிறது. இந்த நிலையில் ஜிஎஸ்டி வரியை வாடிக்கையாளர்கள் மீதே சுமத்தும் வகையில் ஒரு ஆர்டருக்கு 2 முதல் 3 ரூபாய் வரை கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்பள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலமும் டெலிவரி நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் ஈட்டப்போவதாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.