கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பிரதர்ஸ் கிளப் சார்பில் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
தமிழக – கேரள எல்லையான கன்னியாகுமரியில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நடப்பாண்டு ஓணம் பண்டிகையையொட்டி பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் அத்தப்பூ கோலமிட்டும், புத்தாடை உடுத்தியும் பண்டிகையை கொண்டாடினர்.
குழித்துறை பிரதர்ஸ் கிளப் சார்பில் ஓணப் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. மாவேலி மன்னன் வேடமிட்டவர், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று மக்களுக்கு ஓணம் வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்துப் பாரம்பரிய உடையணிந்து பெண்கள் ஆடிப்பாடி நகர்வலம் சென்றதை மக்கள் கண்டு களித்தனர்.