ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாயிரத்து 200-ஐ கடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சுமார் 6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், அந்த நாட்டையே புரட்டிப் போட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளால் பல்வேறு கிராமங்களில் மண் வீடுகள் இடிந்து விழுந்தன.
இதனால் இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள், இடிபாடுகளில் சிக்கினர். இந்நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாயிரத்து 200க்கும் அதிகமானதாகக் கூறப்படுகிறது.
மேலும் சுமார் நான்காயிரம் மக்களுக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.