”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!
Oct 23, 2025, 04:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

Web Desk by Web Desk
Sep 6, 2025, 12:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜிஎஸ்டி சீரமைப்பால் அனைத்துப் பொருட்களின் விலையும் கட்டுக்குள் வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்திய வர்த்தகர்கள் பாதிக்கப்படாமல் இருக்கப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாகப் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்திருப்பது இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சூழலில், 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் கடந்த 2 தினங்களுக்கு முன் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஜிஎஸ்டி வரியில் புதிய சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

அதன்படி 4 அடுக்குகளுக்குப் பதிலாக 5%, 18% என இரண்டடுக்கு வரி விதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஜிஎஸ்டி சீர்திருத்தம், அமெரிக்க வரி விதிப்பு எனப் பல்வேறு விவகாரம் தொடர்பாக டெல்லியில் தனியார்  தொலைக்காட்சி ஒன்றுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தார்.

அப்போது, ஜிஎஸ்டி சீரமைப்பின்போது நடுத்தர குடும்பங்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தம்மிடம் வலியுறுத்தியதாக அவர் கூறினார். ஜிஎஸ்டி வரிகளை சீரமைப்பது குறித்து பிரதமர் மோடி தன்னிடம் 8 மாதங்களுக்கு முன்பே பேசியதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

நடுத்தர குடும்பங்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஜிஎஸ்டி சீரமைப்புகள் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெளிவுபடுத்தினார்.

ஆன்லைன் சூதாட்டம் நாட்டையும், இளைஞர்களையும் அழித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஆன்லைன் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த முடிவு அவசியமானது என்றும் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் நிதிநிலை நன்றாக இருப்பதாகவே தெளிவுபடுத்திய நிர்மலா சீதாராமன், சில அரசியல் கட்சிகள் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்துவிட்டு, நிதி தரவில்லை எனப் பின்னர் மத்திய அரசு குறைக் கூறுவதாகவும் சாடினார்.

மக்கள் பிரச்னைகளை விவாதிக்கவே நாடாளுமன்றம் எனச் சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன், ஆனால் துரிதிருஷ்டவசமாக அவ்வாறு நடப்பதில்லை என்றும் அதிருப்தி தெரிவித்தார்.

ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் நோக்கம், அனைத்துப் பொருட்களையும் உள்நாட்டில் உற்பத்தி செய்வது மட்டுமல்ல என்றும், நிச்சயமற்ற உலகளாவிய வர்த்தகக் கொள்கைக்கு மத்தியில் சுய மரியாதையைப் பெறுவதும் ஆத்ம நிர்பர்  பாரத்தின் நோக்கம் என்றும் தெளிவுபடுத்தினார்.

தேச நலனுக்காக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்கும் என்று கூறிய நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோலை  கொண்டு வரும் எண்ணம் தற்போதில்லை என்றும் தெளிவுபடுத்தினார். யாரிடம் எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை இந்தியா தான் முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: இந்தியாவுக்கு 50 % வரிவிதிப்புகச்சா எண்ணெய்"Crude oil purchases from Russia will continue": No one can dictate - Nirmala Sitharaman's planPM ModiDonald Trumpரஷ்யா
ShareTweetSendShare
Previous Post

கணவன் – மனைவி இடையே சண்டையை கிளப்பிய ‘சமோசா’!

Next Post

உத்தரப்பிரதேசத்தில் வீட்டின் பரண் மேல் பதுங்கிய சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்பி கைது!

Related News

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பலதார மணம், லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டம் – அசாம் முதல்வர் திட்டம்

இந்தியா வருகிறார் கனடா பிரதமர் மார்க் கார்னி?

ராமநாதபுரம் : கனமழையால் தத்தளிக்கும் கிராமம் – 20,000 மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வியட்நாம் : அருவியில் ஆபத்தான முறையில் மீன் பிடிக்கும் நபர்!

வேலூர் கன்சால்பேட்டை பகுதியில் பொதுமக்களை ரப்பர் படகுமூலம் மீட்ட தீயணைப்புத் துறையினர்!

தங்கத்தால் உருவாக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்திய சுசுகி நிறுவனம்!

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

அமெரிக்கா சமைத்துக் கொண்டே லாரியை இயக்கி கோர விபத்து – இந்தியர் கைது!

மீண்டும் சீனாவை சீண்டும் அமெரிக்கா?- யாருக்கு பாதிப்பு?

தஞ்சையில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்ட நெல்முட்டைகள்!

சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை!

ரஷ்யாவில் இந்தியர் உள்ளிட்ட 17 பேர் கொலை – செல்ஃபி வீடியோ வெளியிட்ட தெலங்கானா இளைஞர்!

கோவை : மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies