தேனி மாவட்டம் கம்பம் அருகே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அதிமுக பிரசார பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
அனுமந்தன்பட்டி பகுதியில் சென்ற போது அவரது காரை வழிமறித்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், அதிமுக தலைவர்களை ஒன்றிணைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இபிஎஸ்-ன் பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தினர்.