டெல்லியின் செங்கோட்டையில் நடந்த ஒரு மத நிகழ்வில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கலசங்கள் மற்றும் பிற விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயின் பூசாரி போல் வேடமிட்டு வந்த நபர், இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் தங்கத்திலான தேங்காய், வைரங்கள், மரகத மாணிக்கங்கள் இருந்ததாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை தொழிலதிபர் சுதிர் ஜெயின் என்பவருக்குச் சொந்தமானவை என்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை போலீசார் தேடி வரும் நிலையில், சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.