தி.மு.க வை வீழ்த்த வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ் அனைவரும் கூட்டணிக்குத் திரும்பி வர வேண்டும் எனவும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகக் கோவையில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்குப் பாஜக காரணம் இல்லை என்றும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றிணைக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.
டிடிவி தினரன், ஓபிஎஸ் என அனைவரும் கூட்டணிக்குத் திரும்பி வர வேண்டும் என்றும் அதிமுகவை ஒன்றிணைப்பேன் என உள்துறை அமைச்சர் எங்காவது சொல்லி இருக்கிறாரா?” என்று கேள்வி எழுப்பியவர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கிறார் டிடிவி தினகரன் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.